தெறிக்கவிட்ட சிவம்! பழிக்கு பழி வாங்கிய வில்லியம்ஸ்! அசிங்கப்பட்ட கோலி சொதப்பல்!  - Seithipunal
Seithipunal


திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 180 ரன்களை அடித்துள்ளது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவிற்கு, கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும், தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. கடந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா விரைவாக வெளியேற, இந்த ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு யாருமே எதிர்பாராத வேளையில் ஆல்-ரவுண்டரான சிவம் துபே முன்கூட்டியே களமிறக்கப்பட்டார்.

இந்த முயற்சியானது பலன் அளிக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் சிவம் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து நிதானமாக விளையாட, பின்னர் சில பவுண்டரிகளை அடித்தார். அதற்கிடையே ரோகித் சர்மா இந்த ஆட்டத்திலும் சொதப்பலாக விளையாடி 8 பந்துகளை சந்தித்து 15 ரன்களுடன் கிளீன் போல்டாகி வெளியேறினார்.  அப்போது இந்திய கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.

மறுமுனையில் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த சிவம் துபே பொல்லார்ட்டின் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் விளாசி அவரை அலறவிட்டார். அதோடில்லாமல் 27 பந்துகளில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்து அசத்தியுள்ளார். அடுத்த ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

கடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை கதறவிட்ட இந்திய அணி கேப்டன் விராட்கோலி இந்த போட்டியிலும் ஆரம்பத்தில் தடுமாறிய நிலையில், கடந்த போட்டியில் நொறுக்கி எடுத்த வில்லியம்ஸின்பந்திலேயே அலட்சியமான சாட்டை விளையாடி இந்த ஆட்டத்தில் ஆட்டமிழந்து 19 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆனதும் யாரும் எதுவும் செய்யாதீர்கள், என வாயை மூடி ஒரு விரலை வாயில் வைத்து சைகை காட்டி கோலியை வெறுப்பேற்றினார் வில்லியம்ஸ். 

அதற்கடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் இந்த ஆட்டத்திலும் ஜொலிக்காமல் 10 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜடேஜாவும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டானார். தொடர்ந்து சொதப்பலாக விளையாடி வரும் ரிஷப் பாண்ட் இந்த ஆட்டத்தில் சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி முழுமையாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. 

பலவீனமான பந்துவீச்சை கொண்ட இந்திய அணிக்கு இந்த ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீசை கட்டுப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான். வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்த வில்லியம்ஸ் இந்த ஆட்டத்தில் 30 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதேபோல் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் வால்ஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹோல்டர், காட்ரோல் , பியர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India set target 171 to west indies in Thiruvananthapuram match


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal