அர்ஷ்தீப் சிங் வேகத்தில் வீழ்ந்த நியூசிலாந்து; 05-வது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா..!
India secures a spectacular victory in the final 5th T20 match against New Zealand
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 05 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின், கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய 46 ரன்களில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 05-04 என வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் முதலில், டாஸ் வென்ற இந்தியா அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ், உதலில், பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இதில் தனது சொந்த மண்ணில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் 06 ரன்னில் அவுட்டாகி 05-வது முறையாகவும் இந்த தொடரில் ஏமாற்றமளித்து வெளியேறினார்.

கடந்த 04 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியிலும் சொற்ப ரன்னில் அவுட்டானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து அதிரடியான தொடக்கம் கொடுத்த அபிஷேஷ் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக ஆடி, 43 பந்துகளில் 103 ரன்களை எடுத்து சர்வதேச ட் T 20 போட்டியில் முதல் சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக அணியின் கேப்டன் 30 பந்துகளில் 63 அதிரடியாக ஆடி, 63 ரன்களில் ஆட்டமிழந்தார். 36
அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா 17 பந்துகளில் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் தூபே (08) மற்றும் ரிங்கு சிங் (07) ஆகியோர் களத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 05 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. 272 என்ற வெற்றி இலக்காக பெரிய மைக்கல்லை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளனர்.

இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. இதில், தொடக்க ஆட்டக்காரர் டிம் செப்பர்ட் 05 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் ஆலன் அதிரடியாக ஆடி, 38 பந்தில் 80 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 30 ரன்னும், டேரில் மிட்செல் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சோதி 33 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225 ரன்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 0ஐந்துக்கு நான்கு என என கைப்பற்றி அசத்தியது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். வரும் சக்கரவர்த்தி, ரிங்கு சிங் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தினர். இந்த தொடரில் 36 சிக்ஸர்-களை அடித்து சாதனை படைத்துள்ளது. அத்துடன், போட்டியின் ஆட்டநாயகனாக இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டார்.
English Summary
India secures a spectacular victory in the final 5th T20 match against New Zealand