ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மெகா தோல்வி! நியூசிலாந்தின் தட்டி பறித்த ஆஸ்திரேலியா! முழு பட்டியல்!
India register their biggest defeat with remaining balls in ODI history
விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று (1-1) சமநிலையில் உள்ள நிலையில் 3 வது ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 26 வது ஓவரில் 117 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் 4 பேர் டக் அவுட், 3 பேர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார்கள். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 31 ரன்களும், அக்சார் படேல் 29 ரன்களும் எடுத்தனர். ஆஸி வீரர் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், அப்பாட் 3 விக்கெட்டுகளும், எல்லிஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.
117 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா அணி. இறுதிவரை ஆட்டம் இழக்காமல் மிட்சல் மார்ஷ் 66 ரன்களையும் ட்ராவிஸ் ஹெட் 51 ரன்களையும் எடுத்தனர். இந்த போட்டியானது இந்தியாவிற்கு மிகப்பெரிய மோசமான சாதனையை கொடுத்துள்ளது.
அதிக பந்துகள் மீதமிருக்கவே தோல்வியடைந்த போட்டிகளில் முதலிடத்தில் இந்த போட்டியானது பதிவாகியிருக்கிறது. முன்னதாக 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 212 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது. அதனை தகர்த்து ஆஸ்திரேலியா அணி 234 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தோல்விகள் (மீதமிருக்கும் பந்துகள் அடிப்படையில்)
234: ஆஸ்திரேலியா v இந்தியா - 2023*
212: நியூசிலாந்து v இந்தியா - 2019
209: இலங்கை v இந்தியா - 2010
181: இலங்கை v இந்தியா - 2012
English Summary
India register their biggest defeat with remaining balls in ODI history