IND vs WI : அதிரடி காட்டிய அக்சர் பட்டியல்.. ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்தியா.! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியன் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

அதன்படி, கைல் மேயர்ஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷமார் புருக்ஸ் 35 ரன்கள் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் சிறப்பாக விளையாடி ஷாய் ஹோப் சதம் அடித்தார். அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய நிகோலஸ் பூரன் 77  ரன்கள் ஆட்டமிழந்தார். 

பாவெல் 13 ரன்னில் வெளியேறினார். ஷாய் ஹோப் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவு 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன் எடுத்தது. 

இதையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கி இந்தியன் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 13 ரங்களில் ஆட்டமிழந்தார். சுப்மான் கில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 63 ரன்னுக்கும், சூரிய குமார் 7 ரன்னுக்கும்,  சஞ்சு சாம்சன் 54 ரன்னுக்கும், ஹூடா 33 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் 35 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். 

கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற இரண்டு பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் அக்சர் பட்டியல் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இந்திய அணி 49.4 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவுடன், ஒரு நாள் தொடரை 2 - 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs WI 2nd ODI IND Win


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->