தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி.!
IND vs SL 2nd T20 today
இந்தியா இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது.

இதில், முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு இந்திய அணியில் ரோகித் சர்மா, கோலி, ராகுல் ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடுகிறது.
இதில், நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி கடைசி வரை போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். அதேபோல் தொடரை சமன் செய்ய இலங்கை அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.