#INDvsSA || டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி., பதிலடி கொடுக்க களமிறங்கும் இந்திய அணி.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இந்தியாவுடன் 5 டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி முன்னிலையில் பெற்றுள்ளது. இன்று இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது 20 ஓவர் ஆட்டம் ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் டாஸ் சுண்டப்பட்டதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி, முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. 

முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய ஆட்டம் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

India XI: R Gaikwad, Ishan Kishan, S Iyer, R Pant (c/wk), H Pandya, D Karthik, A Patel, H Patel, B Kumar, Y Chahal, A Khan. 

South Africa XI: R Hendricks, T Bavuma (c), R Van Der Dussen, D Miller, H Klaasen (wk), W Parnell, D Pretorius,  K Maharaj, T Shamsi, K Rabada, A Nortje.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IND vs SA T20 Cricket Match Toss june 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->