3-வது டி20 போட்டி.. தென் ஆப்பிரிக்கா அணியை துவம்சம் செய்து இந்திய அணி அபார வெற்றி.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது. 

இதில் ருத்ராஜ் கெய்க்வாட் 57 ரன்னும், இஷான் கிஷன் 54 ரன்னும், ஹார்திக் பாண்டியா 31 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஆடவில்லை. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

இந்திய பவுலர்கள் வீசிய பந்தை தாக்குப் பிடிக்காமல், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. கேப்டன் பவுமா 8 ரன்னும், ஹென்ரிக்ஸ் 23 ரன்னும், பிரிடோரியஸ் 20 ரன்னும், வான் டெர் டுசன் ஒரு ரன்னில் வெளியேறினார். கிளாசன் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 3 ரன்னியில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 140 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 48 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஹர்ஷல் படேல்  4 விக்கெட்டும் , யுவேந்திர சஹல் 3 விக்கெட்டும், அக்சர் படேல், புவனேஷ் குமார் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs sa 3rd t20 ind win


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->