உலக சாதனையை கோட்டைவிட்ட இந்திய அணி.. அதிரடி காட்டிய டேவிட் மில்லர்.. அசத்தல் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா.!!
IND vs SA 1th T20 Matchi SA Win
இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினர்.

ருதுராஜ் கெய்க்வாட் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் உடன் ஜோடி சேர்ந்து இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 76 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்களில் வெளியேறினார். ரிஷப் பண்ட் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 31 எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன் எடுத்தது.

இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். தேம்பா பாவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இறங்கிய பிரிட்டோரியஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து வான் டெர் டுஷன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் ஜோடி சேர்ந்து தங்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வான் டெர் டுஷன் 75 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 64 ரன்கள் எடுத்து இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்க அணி 112 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வியின் மூலம் இந்திய அணி உலக சாதனை படைக்கும் வாய்ப்பு இருந்தது. தொடர்ந்து 12 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 13-வது போட்டியான தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நேற்று வெற்றி பெற்றிருந்தாலும் உலக சாதனை படைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
IND vs SA 1th T20 Matchi SA Win