இந்தியா - நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி.. இந்தியா பேட்டிங்.. இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்த அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற ஹார்திக் பாண்டியா தலைமையிலான டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில், ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார். இதில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வத ஒருநாள் போட்டி நாளை காலை 7 மணிக்கு ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய ஷர்துல் தாக்கூர் மற்றும் சஞ்சீவ் சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடா மற்றும் தீபக் சகார் ஆகியோர் விளையாடுகின்றனர்.

இந்த நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் தொடரை கைப்பற்ற நியூசிலாந்து அணியும், தொடரை சமன் செய்ய இந்திய அணியும் போராடும் என்பதால் நாளைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விவரம்

இந்திய அணி 11 வீரர்கள் :

ஷிகர் தவான்(கே), ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்(வி.கீ), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

நியூசிலாந்து அணி வீரர்கள் :

ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(c), டேரில் மிட்செல், டாம் லாதம்(w), க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன்

இதுவரை நேருக்கு நேர்

இந்தியா நியூசிலாந்து அணிகள் இதுவரை 111 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 55 போட்டிகளில் இந்திய அணியும், 50 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் முடிவில்லை. ஒரே ஒரு போட்டி மட்டும் சமனில் முடிந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ 2nd oneday international match India batting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->