தீவிரமாகும் கொரோனா பரவல்! இந்திய இங்கிலாந்து தொடர்! கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிர்ச்சி முடிவு!  - Seithipunal
Seithipunal


இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள 1 போட்டியும், அடுத்ததாக தொடங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரும் அஹமதாபாத்தில் நடைபெறுகிறது. 

அதற்கடுத்தபடியாக இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மார்ச் 23, 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 

ஆனால், தற்போது போட்டி நடைபெற உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், புனேயில் நடத்தப்படும் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கொரோனா வைரஸ் மேலும் பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், இந்த போட்டி தொடரை மட்டும் ரசிகர்கள் இன்றி நடத்த பிசிசிஐ சார்பில் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், புனேயில் 3 ஒருநாள் போட்டிகளையும் ரசிகர்கள் இன்றி நடத்துவதற்கு மகாராஷ்டிர மாநில அரசிடம் அனுமதி கேட்டு மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க தலைவர் விகாஸ் ககாட்கர் சந்தித்தார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ரசிகர்கள் இன்றி போட்டிக்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளார். . 

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருப்பதால், அரசின் அறிவுறுத்தலுக்கு பிறகு, பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் கூறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs Eng ODI series will play without fans


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal