#INDvsBAN : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ரத்த காயத்துடன் பாதியில் வெளியேறிய ரோஹித் சர்மா.! - Seithipunal
Seithipunal


வங்காளதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

நியூசிலாந்து தொடரில் விளையாட சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கின்றனர்.

இதில் முதல் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணி முதல் டாக்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து வருகிறது. அதன்படி முகமது சிராஜ் வீசிய 2வது ஓவரில் வங்கதேச வீரர் அனாமுல் ஹக்  ஸ்லிப்பை திசையில் கேட்ச் கொடுத்தார். அதனை பிடிக்க முயன்ற இந்திய கேப்டன் ரோஹித்தின் கையில் காயம் ஏற்பட்டது.   

இதனையடுத்து ரத்தம் வடிந்த கையுடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா  மைதானத்தை விட்டு வெளியேறினார். தற்போது அவருக்கு ரஜத் படிதார் மாற்று வீரராக களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் ஸ்கேன் எடுக்க இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IND vs BAN 2nd oneday international match Rohit Sharma got injured


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->