இன்று இந்தியா -வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.. இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு.? - Seithipunal
Seithipunal


இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி, இந்தியா வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 14- 18) காலை 9 மணிக்கு  சட்டகிராம் மைதானத்தில்  நடைபெற உள்ளது.

இதில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில் கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்கிறார். மேலும், ரோஹித் சர்மாவுக்கு அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.  அவர்களுக்குப் பதிலாக நவ்தீப் சைனி மற்றும் சவுரப் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டையும் தேர்வுக் குழு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நேருக்கு நேர்

இதுவரை இந்தியா-வங்காளதேசம் அணிகள் 11 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 9 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் அணி விவரம்

வங்கதேச அணி வீரர்கள் : 

மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன் (கேட்ச்), லிட்டன் தாஸ், நூருல் ஹசன் (வாரம்), மெஹிதி ஹசன் மிராஸ், எபாடோட் ஹொசைன், கலீத் அகமது, தைஜுல் இஸ்லாம்.

இந்திய அணி வீரர்கள்:

ஷுப்மான் கில், கே.எல். ராகுல் (கேட்ச்), சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வ), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs BAN 1st test match today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->