#INDvsAUS | ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்த விராட், ரோஹித் - களமிறக்கப்பட்ட தமிழ் சிங்கம்! - Seithipunal
Seithipunal



இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பந்து வீச முடிவு செய்தார்.

இதனை எடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 3 சிக்ஸர்கள், மூன்று பவுண்டரிகளை அடித்துள்ளார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், இந்திய அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா, ஒரு சிக்ஸர், ஒரு போருடன் 11 ரன்கள் எடுத்து  விக்கெட்டை இழந்தார்.

சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்த்த விராட் கோலி  இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது வரை இந்திய அணி 10 ஓவர்களில், இரண்டு விக்கெட் இழப்புக்கு, 86 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. களத்தில் கேஎல் ராகுல் 47 ரன்களுடனும், சூரியகுமார் யாதவ் 23 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.


இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பாண்டியா, சஹால், அக்‌ஷர் படேல், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.

ஆஸ்திரேலிய அணி : பின்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், ஜோஷ் ஹேஸில்வுட், ஜோஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், , மேத்யூ வேட், கேமரூன் கிரீன், ஆடம் ஸாம்பா, நாதன் எல்லிஸ். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS T20 2022 sep


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->