#INDvSA || போட்டுத்தாக்கிய பூம் பூம் பும்ரா.... ஆல்-அவுட் ஆகிய தென் ஆப்பிரிக்கா.! 2வது இன்னிங்ஸில் இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் நேற்று (11.1.2022) தொடங்கியது. 

தொடரை வெல்வதற்கான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேஎல் ராகுல் 12 ரன்னுக்கும், மயங்க் அகர்வால் 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து புஜாராவுடன் கைகோர்த்த விராட் கோலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், விராட்கோலி அசத்தலான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி 79 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குறிப்பாக ரிஷப் பண்ட் மட்டும் 27 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்சில் 223 ரன்களை சேர்த்துள்ளது.

இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 17 ரன்களை எடுத்தது. 

இன்றைய 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தினர். இதனையடுத்து களமிறங்கிய கீகன் பீட்டர்சன் தனது அசத்தலான ஆட்டத்தால், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து அதிரடியாக ஆடினார்.

அவர் 72 ரன்கள் எடுத்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். 

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்சில் 210 ரன்களை மட்டுமே எடுத்து உள்ளது. இதனையடுத்து இந்திய அணி 13 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாட களமிறங்க உள்ளது.

அசத்தலாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். உமேஷ் யாதவ், முகமது சமி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஷர்த்துல் தாக்கூர் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ind v sa 3rd test match 2022


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->