கிரிக்கெட்டில்  இப்படி ஒரு அவுட்டா?! வரலாற்றில் முதல்முறையாக நடந்த சம்பவம்! பரிதாபமாக வெளியேறிய இலங்கையின் மேத்யூஸ்!  - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டைம் அவுட் முறையில் ஒரு வீரர் ஆட்டம் இழந்து இருக்கும் சம்பவம் இன்றைய, இலங்கை பங்களாதேஷ் ஆட்டத்தில் நடைபெற்றிருக்கிறது. 

டெல்லியில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நான்கு விக்கெட்டுகளை இழந்தவுடன் ஐந்தாவது விக்கெட்டாக ஆஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அவர் கொண்டு வந்த ஹெல்மெட் பழுதடையவே, அவர் புதிய ஹெல்மெட்டை எடுத்து வருமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து மாற்று வீரர் புதிய ஹெல்மெட் உடன் களத்திற்கு விரைந்தார். 

அதற்குள் நேரம் கடந்து விட்டதாக வங்கதேச அணியினர் முறையிடவே, ஒரு வீரர் ஆட்டம் இழந்தவுடன் அடுத்த வீரர் 3 நிமிடத்திற்குள் வந்து பேட்டிங் செய்துவிட வேண்டும் என்ற விதியின் படி மேத்யூஸ் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டார். 

பங்களாதேஷ் அணியினர் இந்த நேரம் தாமதத்தினை எங்கள் கணக்கில் சேர்க்கக்கூடாது என நடுவரிடம் முறையிட்டதுடன், அவுட் கொடுக்க அப்பீலும் செய்தனர். மேத்யூஸ் வங்கதேச கேப்டன் ஷாகிபிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும், அவர் சற்றும் மனம் இறங்கவே இல்லை. வேறு வழியின்றி நடுவர் மராஸ்மஸ்  அவுட் கொடுக்கவே பந்தை எதுவும் சந்திக்காமலே மேத்யூஸ் வெளியேறினார். 

கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் இந்த முறையில் ஆட்டம்  இழப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி கடந்த போட்டியில் இந்திய அணியிடம் 55 ரன்களில் சுருண்டு கடுமையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், பட்ட காலிலே படும் கெட்ட குடியே கேடும் என்பது போல, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல மேத்யூஸ் ஆட்டம் இழந்திருப்பது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்திருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in cricket history first player Angelo Mathews given Timed out


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->