சர்வதேச கிரிக்கெட்டில் இன்று முதல் 3 புதிய விதிமுறைகள் அறிமுகம் - ஐசிசி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி 3 விதிகளை மாற்றம் செய்துள்ளது. அதன்படி மாற்றம் செய்யப்பட்ட ஐசிசி விதிகள் வரும் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த விதிகள் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பொருந்தும் எனக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஐசிசி மூன்று விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

விதி 1 : கள நடுவர் இனி சாப்ட் சிக்னல் அளிக்காமல் மூன்றாம் நடுவருடன் ஆலோசிக்க வேண்டும்.

விதி 2 : வேகப்பந்து வீச்சாளரை  எதிர்கொள்ளும் ஆட்டக்காரர்கள் ஸ்டம்புக்கு அருகில் உள்ள கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுக்கு அருகில் உள்ள பீல்டர்கள் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.

விதி 3 : ஃப்ரீ ஹிட் பந்தில் ஸ்டம்பில் பட்டாலும் பேட்ஸ்மேன்கள் ரன் ஓடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC indroce 3 new rules in international cricket


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->