வார்னர் 400 ரன்கள் அடிக்கும் வரை விளையாடிருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்! சொன்னது யார் தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று வரும் அடிலெய்டு டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியாவின்  டேவிட் வார்னர், பிரையன் லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தும், ஆஸ்திரேலியா அணி டிக்ளேர் செய்ததால் வார்னரால் சாதனைப் படைக்க முடியாமல் போனது. இந்த நிலையில் அதிரடி ஆட்டம் ஆடும் டேவிட் வார்னரால் மீண்டும் எனது சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

லாரா கூறுகையில், வார்னரின் ஆட்டம் மிகச் சிறந்த ஆட்டம், ஆனால் ஆஸ்திரேலியா அணி வெற்றியைத்தான் பெரியதாக எண்ணியது. அதற்கேற்றார் போல காலநிலையும் பங்கு வகித்ததால் அப்படி ஒரு முடிவை எடுக்க நேரிட்டது. ஆனால் அதே சமயம் ஆஸ்திரேலியா டேவிட் வார்னரை 400 ரன்கள் அடிக்கும் வரை விளையாட விட்டிருந்தால், நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். நான் இங்கே அதனை எதிர்பார்த்தேன். 

குறைந்தபட்சம் டேவிட் வார்னரிடம் தேனீர் இடைவேளைக்குள் 12 ஓவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள், 400 ரன்களை அடித்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் நடக்கவில்லை. ஆனால் அதேசமயம் 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தானின் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இன்று பாகிஸ்தானின் பின்வரிசை வீரர்கள் நீண்ட நேரம் முதல் இன்னிங்சை இழுத்தது, டிக்ளேர் செய்தது அந்த நேரத்தில் சரியானது என்பதனை நிரூபித்தது" என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

i waited warner cross 400 but Australia declared


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal