ஐபிஎல் டிக்கெட் மோசடி: ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் உள்பட நிர்வாகிகள் 4 பேர் அதிரடி கைது..!
Hyderabad Cricket Association president 4 executives arrested in IPL ticket scam
ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் ஜெகன்மோகன் உள்பட உறுப்பினர்கள் நான்கு பேரை ஐதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த நான்கு பேர் மீது ஏமாற்றுதல் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் சுமார் ரூ. 02 கோடிக்கு மேலான பணத்தை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணி ஒரு குற்றசாட்டை முன்வைத்தது. அதாவது ஏற்கனவே நிர்ணயிக்கபட்டிருக்கக்கூடிய 3,900 ஐ.பி.எல் டிக்கெட்களை இந்த சங்கத்திற்கான தரவேண்டிய டிக்கெட்டுகளை தவிர அந்த மைதானத்தில் இருக்க கூடிய 10 சதவீதம் டிக்கெட்களை தங்களுக்கு வழங்கவேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், அதேபோல தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி குற்றம் சுமத்தியிருந்தது.
-7lvzt.png)
இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் இது பதிவிட்டிருந்தார். அத்துடன், அந்த சங்கத்தில் இருக்க கூடிய தலைவர் மற்றும் உறுப்பினருக்கு ஏதிராக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தது. இதனை தொடர்ந்து குறித்த நான்கு பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
Hyderabad Cricket Association president 4 executives arrested in IPL ticket scam