ஜடேஜாவை எப்படி சிஎஸ்கே விட்டது? – சஞ்சு–ஜடேஜா டிரேடு ஆச்சரியமா இருக்கு! அணில் கும்ப்ளே கருத்து! - Seithipunal
Seithipunal


2026 ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், இந்த ஆண்டின் மிகப்பெரிய டிரேடிங் ஒப்பந்தமாக கருதப்பட்ட ரவீന്ദ്ര ஜடேஜா – சஞ்சு சாம்சன் மாற்றம் இன்னும் ரசிகர்களிடையே பேசுபொருளாகவே உள்ளது.

சிஎஸ்கே அணியின் முக்கிய தூணாக நீண்ட காலம் விளையாடிய ரவீந்திர ஜடேஜா, சாம் கரனுடன் சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குச் சென்றுள்ளார். அதே நேரத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

இந்த டிரேடிங் குறித்து இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:“ரவீந்திர ஜடேஜா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றிருப்பது ஒரு நல்ல நகர்வு. ஆனால் சிஎஸ்கே போன்ற அணி ஜடேஜாவை இவ்வளவு எளிதாக விடுப்பதே எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. சிஎஸ்கே பொதுவாக நட்சத்திர வீரர்களை விடுவதில்லை. ஆனால் இந்த முடிவு எதிர்பாராத ஒன்று.”

:“சஞ்சு சாம்சனின் வரவு சிஎஸ்கே அணிக்கு மிகவும் நல்லது. அதேபோல ஜடேஜா ராஜஸ்தானுக்கு செல்வதும் சரியான முடிவாக இருக்கும். அவருக்கு அங்கு கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் கூட இருக்கலாம்.”

ஜடேஜா–சஞ்சு டிரேடு, அடுத்த ஐபிஎல் சீசனில் அணிகளின் சமநிலையை முற்றிலும் மாற்றக்கூடிய பெரிய மாற்றமாக ரசிகர்களும் நிபுணர்களும் பார்க்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How did CSK get rid of Jadeja Sanju Jadeja trade is surprising Anil Kumble comments


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->