2026 புத்தாண்டில் இந்தியாவுக்காக விராட் கோலி – ரோஹித் சர்மா விளையாடும் ஒருநாள் போட்டிகள் பட்டியல் இதோ!
Here is the list of ODI matches that Virat Kohli and Rohit Sharma will play for India in the New Year 2026
உலகம் முழுவதும் 2026 ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக துவங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்த ஆண்டில் இந்தியாவுக்காக விளையாட உள்ள ஒருநாள் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடி பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அவர்கள், 2027 உலகக் கோப்பை வரை இந்திய அணிக்காக களமிறங்கி வெற்றியுடன் விடை பெற வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது.
வயதை காரணமாக வைத்து தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தரப்பில் சில முயற்சிகள் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் பேட்டிங்கில் அபாரமான ஃபார்மில் இருக்கும் விராட் மற்றும் ரோஹித், ஐசிசி தரவரிசையில் டாப் 2 ஒருநாள் பேட்ஸ்மேன்களாக முன்னேறி தங்களின் திறனை நிரூபித்து வருகின்றனர்.
2026 ஆம் ஆண்டில் இந்திய அணி முதலில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகள் ஜனவரி 11, 14, 18 ஆகிய தேதிகளில் வதோதரா, ராஜ்கோட் மற்றும் இந்தூர் மைதானங்களில் நடைபெற உள்ளன. இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் அவர்கள் களமிறங்க உள்ளனர். ஜூலை மாதத்தில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடரில், ஜூலை 14, 16, 19 தேதிகளில் பர்மிங்காம், கார்டிப் மற்றும் லார்ட்ஸ் மைதானங்களில் இந்தியாவுக்காக இருவரும் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில் வங்கதேசத்தில் நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகள், அக்டோபரில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள், நவம்பரில் நியூசிலாந்து மண்ணில் நடைபெறும் தொடர் மற்றும் டிசம்பரில் இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரிலும் விராட், ரோஹித் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் இந்திய அணி மொத்தமாக 21 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த அனைத்து போட்டிகளிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக களமிறங்கி, 2027 உலகக் கோப்பைக்கு முன்பாக அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
English Summary
Here is the list of ODI matches that Virat Kohli and Rohit Sharma will play for India in the New Year 2026