தொடையின் முன்பகுதியில் காயம்; ஆப்கன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ள ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா..!
Hardik Pandya has withdrawn from the ODI series against Afghanistan due to injury
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்களில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கான 03 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 13-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
ஷுப்மன் கில் தலைமையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், விளையாடுவதற்கு முன்னாள் கேப்டன்கள் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் காயம் காரணமாக விராட் கோலி விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அவர் அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது முதுகு பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆப்கானுக்கு எதிரான இந்திய அணியில் இவர்கள் இடம்பிடித்திருந்தாலும், உடற்குதியை நிரூபித்தால் மட்டுமே தொடரில் விளையாட முடியும் என பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட அவர் உடற்தகுதி பெற்றதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் அவருக்கு தற்போது தொடையின் முன்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த தொடரில் அவர் விளையாடுவது கடினம் என பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதான ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக்காக 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில்,1,904 ரன்கள், 91 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்திய டி20 அணியிலும் அவர் விளையாடி வருகிறார். 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக 2018-இல் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருந்த நிலையில், அதன் பின்னர் அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Hardik Pandya has withdrawn from the ODI series against Afghanistan due to injury