3வது டெஸ்ட் போட்டி : உள்ளே வரும் கோலி.. வெளியேறும் முக்கிய வீரர்.! முன்னாள் வீரர் வைத்த முக்கிய கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1 - 1 என கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனால், நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். 

இரு அணிகளுக்குமே 3வது டெஸ்ட் போட்டி மிக முக்கியமானது என்பதால் இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர். இந்த வகையில், கடைசி டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு ஆலோசனைகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வழங்கி உள்ளார்.  

இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு காலத்தில் அசுர பலத்துடன் இருந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தற்போது போதிய பலத்துடன் இல்லை. தென் ஆப்பிரிக்க அணியை விட இந்திய அணி பல மடங்கு வலுவானதாக உள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு புறப்பட்ட தினத்தில் இருந்து நான் சொல்வது, தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் விழுத்த இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 

3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிச்சயமாக வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை வெல்லும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும், ரகானே இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்ததை நல்ல விஷயமாக பார்க்கிறேன். ரகானேவிற்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். விராட் கோலி அடுத்த போட்டியில் மீண்டும் வந்து விட்டால், அதற்காக ரகானேவை அணியில் இருந்து நீக்கி விடக்கூடாது. ரகானேவிற்கு நிச்சயம் ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட வேண்டும். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த ரகானே, அடுத்த போட்டியில் அதை சமமாக மாற்றுவார் என முழுமையாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harbhajan singh says about 3rd test match


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->