மருத்துவமனையிலிருந்து வெளியேறிய கில்! ஸ்கேன் ரிப்போர்ட் பிறகு டெஸ்ட் மீண்டும் முடிவு!
gill leaves hospital After scan report test results back
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 35வது ஓவரில் களமிறங்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில், சைமன் ஹார்மர் வீசிய மூன்றாவது பந்தையே காலில் நின்று பவுண்டரிக்கு பறக்க விட்டார். ஆனால் அந்த உற்சாகமான ஷாட்டை அடித்த உடனே அவர் திடீரென கழுத்தைப் பிடித்தபடி கடுமையான வலியால் நின்ற இடத்திலே சோர்ந்து போனார்.
உடனே அணியின் பிஸியோ மைதானத்துக்கு ஓடி வந்து பரிசோதனை செய்தார். கழுத்து பகுதி இறுகி வலி அதிகரித்திருந்ததால், கில் உடனே விளையாட்டை நிறுத்தி மைதானத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின் மீண்டும் அவர் பேட்டிங் செய்ய திரும்பவில்லை.

போட்டிக்குப் பிறகு, சுப்மன் கில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு, டாக்டர்களின் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டார் என பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியானது.இதனிடையே, சிகிச்சை முடிந்து சுப்மன் கில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், அவருக்கு அடுத்த ஐந்து நாட்கள் முழு ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதன் காரணமாக நேற்றைய போட்டியிலும் அவர் களமிறங்கவில்லை.டாக்டர்களின் இறுதி மருத்துவ அறிக்கை வெளியானதற்குப் பிறகே, இந்த டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் விளையாடவா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, கழுத்து வலி காரணமாக அவர் டெஸ்ட் போட்டியை தவறவிடுவது இது இரண்டாவது முறை என்பதும் கவலைக்குரிய விஷயமாக ரசிகர்களிடையே பேசப்படுகிறது.
English Summary
gill leaves hospital After scan report test results back