கிங் இந்த சாதனையை முறியடித்த பிரின்ஸ்: டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டனாக சாதனை மன்னன் ஆனார் கில்..! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு வழங்கப்படும் புதிய கோப்பை டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை.  இது பட்டோடி டிராபிக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட்டுள்ளது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் நினைவாக பெயரிடப்பட்டது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்த கோப்பைக்காக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடு வருகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான பர்மிங்காம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 02-வது இன்னிங்சிலும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம், முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இரு அணிகளுக்கு இடையிலான 02-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிபர்மிங்காமில் கடந்த ஜூன் 02-ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்களை குவித்தது. அதில் கேப்டன் கில் 269 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது.

இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில்,180 ரன்களுடன் 02-வது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. ஜெய்ஸ்வால் (28), கே.எல்.ராகுல் (55), கருண் நாயர் (26), பன்ட் (65) என ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடி கேப்டன் கில் -02-வது இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 147 ரன்கள் எடுத்த கில், இதன்மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

அணியின் கேப்டனாக விளையாடும் முதல் டெஸ்ட் தொடரிலேயே அதிக ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.  முன்னதாக, 2014-15-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, அப்போதைய டெஸ்ட் அணியின் கேப்டன் கோலி 449 ரன்களை குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.

அதேபோல, ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அத்துடன், SENA நாடுகளுக்கு எதிராக 300 ரன்களை கடந்த வீரர்களான டிராவிட் (305), சச்சின் (301) ஆகியோரின் பட்டியலில் கில்லும் (430) இணைந்துள்ளார்.

அதேபோல, டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் 03 சதங்களை அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார். இன்றைய நாள் ஆட்டத்தில் கில் 162 பந்துகளில் 161    ரன்கள் 13 பவுண்டரிகள்,08 சிக்ஸர் என அசத்தியுள்ளார்.    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gill breaks Virat Kohlis record as India captain in Tests


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->