தென் ஆப்பிரிக்கா SA20 தொடரில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கங்குலி
Ganguly appointed head coach of Pretoria Capitals for South Africa SA20 series
ஐ.பி.எல். போலவே, தென் ஆப்பிரிக்காவில் SA20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் 4வது சீசன் வரும் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் கிரஹாம் போர்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஜோனாதன் டிரோட் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். ஆனால் அணியின் செயல்திறனில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாததால், தற்போது அவர் நீக்கப்பட்டு கங்குலி புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதில் சிறப்பு என்னவெனில், தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஷான் பொல்லாக் அணியின் துணை பயிற்சியாளராக தொடர்கிறார்.
English Summary
Ganguly appointed head coach of Pretoria Capitals for South Africa SA20 series