பழங்களை சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா? மத்த நேரம் சாப்பிட்டால் முழுச்சத்துக்கள் கிடைக்காதாம்!நிபுணர்கள் சொல்வது என்ன? - Seithipunal
Seithipunal


நம் உடலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை பழங்கள். தினமும் பழங்களைச் சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், பழங்களை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

நிபுணர்களின் கூற்றுப்படி, பழங்களில் உள்ள சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சிக் கொள்ள, அவற்றை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுவது தான் சிறந்தது. அந்த நேரத்தில் செரிமான மண்டலம் அதிக வேகமாக செயல்படும். மேலும் என்சைம்கள் வலுவாக உருவாகி, பழங்களில் உள்ள சத்துக்கள் எளிதாக உடைந்து உடலில் கலக்கும். இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து, நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.

அதே நேரத்தில், உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிடக்கூடாது எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் அப்படி சாப்பிட்டால் வயிற்று மந்தம், புளிப்பு தன்மை, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் உருவாகும் அபாயம் உள்ளது. குறிப்பாக புரதம் நிறைந்த உணவுகளுக்குப் பிறகு பழங்களை சாப்பிடுவது உடலுக்கு தீங்கானது.

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்தது.இல்லையெனில், உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.அல்லது, உணவு சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து பழங்களை சாப்பிடலாம்.

இந்த முறையில் பழங்களை சாப்பிட்டால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அதோடு, செரிமான பிரச்சனைகளும் தவிர்க்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know when is the right time to eat fruits Eating them at the wrong time will not provide you with all the nutrients What do experts say


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->