2026இல் கழற்றி விடத் தான் கம்பீர் டாப் 5ல கூட ஸ்ரேயாஸ் ஐயரை சேர்க்காம விட்ருக்காரு.. தினேஷ் கார்த்தி விளாசல்! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி துவங்கியது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது ரசிகர்களை பெரிதும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரேயாஸ் இந்தியா வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 2024ஆம் ஆண்டு அவர் கேப்டனாக இருந்த கோல்கத்தா அணியை ஐபிஎல் சாம்பியன் ஆக்கியதோடு, 2025 சாம்பியன்ஸ் ட்ரோபியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல வழிகாட்டினார். அதோடு, 2025 ஐபிஎல் தொடரிலும் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து பஞ்சாப் அணியை 11 ஆண்டுகள் கழித்து ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். இப்படிப்பட்ட சாதனைகள் இருந்தும், ரிசர்வ் பட்டியலில் கூட அவருக்கு இடம் கிடைக்காதது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முடிவுக்குப் பின்னால் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சுப்மன் கில்லை வருங்கால கேப்டனாக உருவாக்கும் திட்டத்தில் ஸ்ரேயாஸ் புறக்கணிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தில் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:
“ஒரு வீரர் செய்யக்கூடிய அனைத்தையும் ஸ்ரேயாஸ் செய்துள்ளார். ஆனால் கம்பீர் பயிற்சியாளராக வந்ததிலிருந்து இந்தியா 20 டி20 போட்டிகளில் 17 வெற்றி பெற்றுள்ளது. எனவே அவர் சில கடினமான முடிவுகளை எடுப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால், ரிசர்வ் பட்டியலில் கூட ஸ்ரேயாஸ் இல்லாதது எனக்கு சரியாகப் படவில்லை. அது வருங்கால உலகக் கோப்பையிலும் அவருக்கு இடமில்லை என்பதற்கான சிக்னல். அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன் ஆசியக் கோப்பைக்கு பின் இந்தியா பல இருதரப்பு தொடர்களில் விளையாட உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் டாப் 5 ரிசர்வ் பட்டியலிலும் ஸ்ரேயாஸ் இல்லாதது நியாயமாகத் தோன்றவில்லை” என்றார்.

மேலும், “டி20 உலகக் கோப்பையை முன்னோக்கிய பயணத்தில் அவர் கண்டிப்பாக அங்கமாக இருக்க வேண்டும். அந்த உலகக் கோப்பையில் அவர் இருப்பார் என்று நான் உண்மையாக நம்புகிறேன். ஏனெனில் அவர் அதற்குத் தகுதியானவர். உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல், சர்வதேச மட்டங்களில் தொடர்ந்து அசத்தியால், எந்த ஃபார்மட்டிலும் அவரை யாராலும் புறக்கணிக்க முடியாது” என்று கார்த்திக் வலியுறுத்தினார்.

இந்த சூழ்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் வருங்காலத்தில் இந்திய அணிக்குத் திரும்புவாரா என்ற கேள்வி கிரிக்கெட் வட்டாரத்தில் சூடான விவாதமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gambhir did not even include Shreyas Iyer in the top 5 only to be removed in 2026 Dinesh Karthi outburst


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->