முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்களின் பட்டியல் இதுதான்.? - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது, இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் துவங்க உள்ளது. 

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் விளையாடிப் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். இன்று நடைபெறும் போட்டியில் அனுபவ வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இன்று நடைபெறும் போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் மாயன்க் அகர்வால் களமிறக்கப்படுவார்கள். மிடில் ஆர்டரில் ரஹானே, புஜாரா, விராட் கோலி இடத்தில் ஸ்ரேயஸ் ஐயர் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பராக விர்திமான் சஹா இடம் பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆல் ரவுண்டர் ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பந்து வீச்சாளர்கள் வரிசையில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல் :

சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஸ்ரேயஸ் ஐயர், ரஹானே, விர்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

first test match predicted xi


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->