WhatsApp app இல் வருகிறது புதிய அப்டேட்; பார்த்ததும் மறையும் மெசேஜ்கள்..! - Seithipunal
Seithipunal


மொபைலில் எந்த ஆப் இருக்கின்றதோ இல்லையோ வாட்ஸ்அப் செயலி இல்லாத மொபைல் இருப்பது அரிது. இந்த வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் தாங்கள் அனுப்பும்/பெறும் மெசேஜ்கள் பார்த்தவுடன் தானாகவே மறையும் 'After Reading' என்ற அம்சத்தை சோதனை செய்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள இலகுவான வசதி உள்ளது.

அதன்படி, மெட்டா நிறுவனம் தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.

அதன்படி, பயனர்கள் தாங்கள் அனுப்பும்/பெறும் மெசேஜ்கள் பார்த்தவுடன் தானாகவே மறையும் 'After Reading' என்ற அம்சத்தை சோதனை செய்து வருவதாக வாட்ஸ்அப் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் WABetaInfo தெரிவித்துள்ளது.

'After Reading' அம்சம்:

ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட ஆப்பிள் போன்களில் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 26.19.10.72-வில் 'After Reading' அம்சம் சோதிக்கப்பட்டு வருகிறது. இதை குறிப்பிட்ட பீட்டா டெஸ்டர்களின் பயன்பாட்டுக்கு இப்போது வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்அப்பில் 'Disappearing Messages' அம்சம் ஏற்கனவே உள்ளது. இதன் மூலம் 24 மணி நேரம், 07 நாட்கள், 90 நாட்களுக்குள் சாட்கள் தானாகவே டெலிட் ஆகிவிடும். இத்தகைய சூழலில் பயனர்களின் பிரைவசியை மேம்படுத்தும் வகையில் 'After Reading' அம்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

அதன்படி 'After Reading' அம்சம் மூலம் பயனர்கள் அனுப்பும் மெசேஜ்கள் தானாகவே 05 நிமிடம், 01 மணி நேரம் அல்லது 12 மணி நேரத்துக்குள் டெலிட் ஆகிவிடும். அந்த மெசேஜை பெறுகின்ற பயனர், அதை பார்த்த பின்னர்தான் டெலிட் ஆகும் என்பது முக்கியமான விஷயமாகும். 

அதாவது, பயனர்கள் செட் செய்துள்ள டைமருக்குள் அந்த மெசேஜ்கள் தானாகவே மறைந்துவிடும். இது மெசேஜை அனுப்பியவருக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மெசேஜை பெறுகின்ற நபர் அதை படித்ததும், அனுப்பியவர் செட் செய்த டைம்லைனின் படி நீங்கும் என்றும், அவர் அந்த மெசேஜை பார்க்கவில்லை என்ற சூழலில் மெசேஜ் அனுப்பப்பட்ட 24 மணி நேரத்துக்குள் நீங்கிவிடும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Disappearing messages are arriving as a new feature on the WhatsApp app


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->