பெட்டிங் வரிசை மாறினாலும்..எதற்கும் ரெடிடீமுக்கு என்ன தேவையோ அதுதான் எனக்கு முக்கியம்.. - வெளிப்படையாக பேசிய வாஷிங்டன் சுந்தர்
Even if the batting order changes whatever the team needs is what matters to me Washington Sundar speaks openly
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடுமையான சிரமத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி வெறும் 201 ரன்களில் அவுட் ஆகியது. இதனால் 288 ரன்கள் முன்னிலை எடுத்த Proteas அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிக்கொண்டு இருக்கிறது.
இந்த தொடரில் முதலாம் டெஸ்டில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி அசத்தலாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர், இரண்டாவது டெஸ்டில் எட்டாவது இடத்தில் அனுப்பப்பட்டார். சாய் சுதர்சன் அணியில் சேர்ந்ததுமே பேட்டிங் வரிசையில் மாற்றம் ஏற்பட்டது. டெஸ்ட் அணியில் அவர் அடிக்கடி பேட்டிங் வரிசை மாற்றத்தையே சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமை குறித்து கேட்கப்பட்டபோது வாஷிங்டன் சுந்தர் வெளிப்படையாக பதிலளித்து, தனக்குள் எந்த குழப்பமும் இல்லை என தெரிவித்தார். அவர் கூறியதாவது:
“அணிக்கு என்ன தேவைப்படுகிறதோ, அதைச் செய்ய நான் எப்போதும் தயார். இந்திய அணியின் நிர்வாகம் என்னை எங்கு பேட்டிங் செய்ய சொன்னாலும், எங்கு பந்து வீச சொன்னாலும் நான் மகிழ்ச்சியாகச் செய்வேன். இது ஒரு டீம் கேம். எனவே நான் முழுமையாக அணிக்காக ரெடி.”
மேலும் அவர்,“எந்த சூழல் வந்தாலும் எனால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக நான் தொடர்ந்து கடின உழைப்பை மேற்கொண்டு வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் தளர்வான ஆட்டமும், சுந்தரின் பேட்டிங் ஆர்டர் மாற்றமும் குறித்து ரசிகர்கள் பெரிய விவாதத்தில் இறங்கியுள்ளனர்.
English Summary
Even if the batting order changes whatever the team needs is what matters to me Washington Sundar speaks openly