ENGvIND: ஜெய்ஷ்வால், கில் அதிரடி சதம்! ஏமாற்றிய சாய்! இந்திய அணி அசத்தல் ஆட்டம்! - Seithipunal
Seithipunal


இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று லீட்ஸில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா அணிக்காக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராகுல் 42 ரன்னில் வெளியேறினார். இவருக்கு அடுத்ததாக களமிறங்கிய சாய் சுதர்சன் ரன் எதுவும் எடுத்தமுடியாமல் ஷூன்யத்தில் பவிலியனை சேர்ந்தார்.

இதையடுத்து கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடியாக களம் பிடித்து இந்தியாவின் ரன்கள் எண்ணிக்கையை மேம்படுத்தினர். இருவரும் பொறுப்புடன் ஆடியதில், இந்திய அணி தொடக்கம் சிறப்பாக அமைந்தது. 

இதில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இது அவரது டெஸ்ட் போட்டிகளில் 5-வது சதமாகும். தொடக்க நிலையில் இந்திய அணிக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கிய ஜெய்ஷ்வாலுக்கு ரசிகர்களின் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அடுத்து ஜெய்ஷ்வால் 101 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் சுப்மன் கில் உடன் பண்ட் கைகோர்த்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் கேப்டன் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தியுள்ளார். தற்போதுவரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ENGvIND Yashasvi Jaiswal gill 100


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->