ENG vs IND : 2வது டி20 போட்டி.. இந்திய அணியில் இணையும் மூத்த வீரர்கள்.!!
ENG vs IND 2nd T20 Match
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது. அதில் ஹார்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தினார். மேலும், இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் விராட்கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு திரும்புகிறார்கள். இதனால் இந்திய அணி மேலும் பல வாய்ந்த அணியாக மாறுகிறது. ஆகையால் இன்று ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.