சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு? அவரே வெளியிட்ட வீடியோ.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சேர்ந்தவரான தினேஷ் கார்த்திக், கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் தோனி விளையாடிக் கொண்டிருந்ததால் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரை இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

தற்போது இவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் சரியாக விளையாடவில்லை.

டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பிறகு தினேஷ் கார்த்திற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நண்பர்களுக்கு நன்றி. இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்தேன். எங்களது முயற்சியில் நாங்கள் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். ஆனாலும் அது என் வாழ்நாளில் மறக்க முடியாத பல நினைவுகளை தந்துள்ளது என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாரா என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dinesh Karthik instgram video viral


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal