அக்சரின் அதிரடி; மில்லரின் மிரட்டல்; மாதவ் திவாரியின் வேகத்தில் வீழ்ந்த ஷ்ரேயஸ் & கோ..! - Seithipunal
Seithipunal


19 வது ஐபிஎல் தொடரின் 55 வது லீக் போட்டி, இன்று பஞ்சாப் மற்றும் டில்லி அணிகளுக்கு தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப்பை 03 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 05 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஸ் ஆர்யா 56 ரன்கள், பிரப்சிம்ரன் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அணியின் கேப்டன் ஷிரேயஸ் ஐயர் 59 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸூப்பர் காணலி 38 ரன்களிலும், ஸ்டோய்னிஸ் 01 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சஷாங் சிங் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து சூரியன்ஸ் செட்கே 21 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி, 210 ரன்களை எடுத்து 05 விக்கெட்டினை இழந்தது.

டெல்லி அணி சார்பில், மிட்சல் ஸ்டார்க், மாதவ் திவாரி தலா 02 விக்கெட்டினை வீழ்த்தினர். முகேஷ் 01 விக்கெட்டினை வீழ்த்தினார். அடுத்து, 211 என்று இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் போரல் 05 ரன்னிலும், கே.எல். ராகுல் 09 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து சாகில் (13), ஸ்டப் (12), என ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த அணியின் கேப்டன் அக்சர் படேல் நிதானமாக ஆடி 30 பந்துகளில் 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்து அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மதில் மேல் பூனையை இருந்த இந்த போட்டியில், அசுதோஷ் சர்மா, 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இன்று முதன் முதலில் பிளேயிங் 11 -இல் வந்த மாதவ் 08 பந்துகளில் 18 ரன்கள், மறுபுறம் ஆகிப் நபி 02 பந்துகளில் 10 ரன்கள் என சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியில், டெல்லி அணி 19 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi Defeats Punjab by 3 Wickets


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->