2வது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் டேவிட் வார்னர் விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு.!
David Warner ruled out of 2nd test against India
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் பார்ட்னர் பாதியில் விலங்கியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 17-21) காலை 9:30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 78.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 4 விக்கெட்களும், அஸ்வின், ஜடேஜா 3 தலா விக்கெட்களும் வீத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று பேட்டிங் செய்த போது ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து டேவிட் வார்னருக்கு ஏற்பட்ட காயம் அதிகமாக இருப்பதால் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் விளையாடிய மேத்யூ ரென்ஷா விளையாடுகிறார்.
English Summary
David Warner ruled out of 2nd test against India