ஆஸ்திரேலியா தொடரிலிருந்து காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நடந்தது. இந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், 77 பந்துகளில், 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகினர். அதன்பிறகு, விளையாடிய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு, 389 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி 390  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. 

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்த தோல்வியை தழுவியது. 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகி உள்ளார். அவருக்கு பதில் டார்சி ஷார்ட் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

david warner ruled out for one day and t20 match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->