சென்னை அணிக்கு நடந்த அநியாயம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் தொடரில் 59வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியின் தொடக்க வீரர் டேவான் கான்வே டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தனர். 

அதன் பிறகு மொயின் அலி டக் அவுட் ஆனார். ராபின் உத்தப்பா ஒரு ரன்னுக்கும், ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் ஆட்டமிழந்தனர். கேப்டன் தோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் சென்னை அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தோனி 36 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து, 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இசான் கிஷன் 6 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். டேனியல் சாம்ஸ் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். திலக் வர்மா 34 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். டிம் டேவிட் 16 எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். 

மும்பை அணி 16.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுகிறது.

இந்தப் போட்டியில் சென்னை அணிக்கு அநியாயம் நடந்தது எனக்கூறலாம்.  முதல் ஓவரை மும்பை அணி வீரர் டேனியல் சாம்ஸ் வீசினர். முதல் பந்தை ருதுராஜ் கெயிக்வாட் சிங்கிள் அடித்தார். ஸ்ட்ரைக்கிற்கு வந்த டெவோன் கான்வே முதல் பந்திலேயே டக் அவுட் ஆனது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. டேனியல் சாம்ஸ் வீசிய பந்தை டெவோன் கான்வே ஆட முயன்ற போது பந்து பேடில் பட்டது. அதற்கு களத்திலிருந்து நடுவர் எல்.பி.டபள்யூ அவுட் கொடுத்தார். ஆனால் அந்த பந்து ஸ்டம்ப் லைன் மிஸ்ஸிங் ஆக தான் சென்றது. இதனை அறிந்த கான்வே  டிஆர்எஸ் மூலம் மூன்றாவது நடுவருக்கு செல்ல கூறினார். ஆனால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. 

இந்தப் போட்டியில் டிஆர்எஸ் முறைக்கு சில மணி நேரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் மூலம் மின் விளக்குகள் மட்டும் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணத்தால் தொழில்நுட்பக் கருவிகள் அனைத்தும் பயன்படுத்த முடியாமல்போனது. நாட் அவுட் என தெரிந்தும் அதனை டிஆர்எஸ் கேட்க முயன்றும், கேட்க முடியாமல் போனது.

இதையடுத்து, மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இரண்டாவது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் ராபின் உத்தப்பா ஒரு ரன்னுக்கு எல்பிடபிள்யூ ஆனார். அவர் மூன்றாவது நடுவருக்கு செல்ல முயன்றும், அதுவும் நடக்கவில்லை. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CSK vs MI Match DRS Issue


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->