#IPL2023 : அதிகமுறை 200 ரன்களை குவித்து CSK அணி புதிய சாதனை.!
CSK Score 200 plus runs 25 times in IPL
16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் சிறப்பாக விளையாடிய கான்வே 45 பந்துகளில் (6 சிக்ஸர் & 6 பவுண்டரி) 83 ரன்களும், ஷிவம் தூபே 27 பந்துகளில் (5 சிக்ஸர் & 2 பவுண்டரி) 52 ரன்கள் குவித்தனர்.
அதனைத் தொடர்ந்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெறும் என நினைத்த நிலையில் மேக்ஸ்வெல் மற்றும் டூபிளஸிஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனையடுத்து சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு திரும்பியது. கடைசி ஓவர் வரை போராடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த வகையில் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 25 முறை 200 200 ரன்களுக்கு மேல் குவித்த என்ற பெருமையை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பெங்களூரு அணி 24 முறையும், மூன்றாவது இடத்தில் பஞ்சப்பணி 17 முறையில் 200 ரன் களுக்கு மேல் குவித்துள்ளது.
English Summary
CSK Score 200 plus runs 25 times in IPL