ஐபிஎல் மேடையில் சூடுபிடிக்கும் சிஎஸ்கே! யார் தக்கவைக்கப்பட்டார்? யார் வெளியேற்றப்பட்டார் தெரியுமா....?
CSK heating up IPL stage Who was retained Do you know who dropped
வரவிருக்கும் 19வது ஐபிஎல் சீசனுக்கான வீரர் ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 15 அல்லது 16ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 10 அணிகளும் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வீரர்கள் பரிமாற்றம் (Trade Window) தொடர்பான பேச்சுவார்த்தைகளும் அணிகளுக்குள் சூடுபிடித்துள்ளன. அதில் மிகுந்த கவனம் ஈர்க்கும் செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் வீரர் பட்டியல்.அணிக்கு நெருக்கமான வட்டார தகவலின்படி, வெளிநாட்டு வீரர்களில் ரச்சின் ரவீந்திரா மற்றும் டேவான் கான்வே (நியூசிலாந்து) ஆகியோரை கழற்றி விட சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாத இந்திய வீரர்கள் விஜய் சங்கர், ராகுல் த்ரிபாதி, தீபக் ஹூடா உள்ளிட்ட பலரும் அணியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாறாக, சிஎஸ்கே தக்கவைக்க தீர்மானித்துள்ள வீரர்களில் ஆயுஸ் மாத்ரே, உர்வில் படேல் உள்ளிட்ட இந்திய இளம் திறமைகள் உள்ளனர். வெளிநாட்டு வீரர்களில் பிரேவிஸ், நாதன் எல்லீஸ், மதீஷ பத்திரனா ஆகியோர் அணியில் தொடரவுள்ளனர்.
பல அணிகள் எல்லீஸை ட்ரேட் முறையில் வாங்க ஆர்வம் காட்டியிருந்தாலும், சிஎஸ்கே அதை நிராகரித்துள்ளது. ஆனால் அதே ட்ரேட் முறையில் ஜடேஜா மற்றும் சாம் கரன் வெளியேற வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், புதிய சேர்க்கைகளுக்காக சிஎஸ்கே ரூ.30 கோடி நிதியுடன் ஏல மேடையில் கலக்கத் தயாராகியுள்ளது. புதிய வீரர்கள் யார், யாரை வாங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
CSK heating up IPL stage Who was retained Do you know who dropped