இரு முறையல்ல 21 முறை டக்-அவுட் ஆனால் தான் வெளியேற்றுவேன்... கம்பீர் குறித்து சஞ்சு சாம்சன்!
Cricket Sanju samson gautam gambhir
இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், தேசிய அணிக்காக அறிமுகமாகி 9 ஆண்டுகள் கடந்திருந்தாலும், இதுவரை 50 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
திறமையான வீரரானாலும், தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமை குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்தன. ஆனால் சமீப காலங்களில் அவர் அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகிறார்.
சஞ்சு சாம்சன் சமீபத்தில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் ரன் எடுக்காமல் டக்-அவுட்டானபின், டிரஸ்ஸிங் ரூமில் மனமுடைந்து அமர்ந்திருந்தேன்.
அப்போது கவுதம் கம்பீர் என்ன நடந்தது என்று கேட்டார். நான், ‘இரண்டு வாய்ப்புகள் கிடைத்தது, ஆனால் இரண்டிலும் ரன் எடுக்க முடியவில்லை’ என்று சொன்னேன்.
அதற்கு அவர், ‘அதனால் என்ன? நீங்கள் 21 முறை டக்-அவுட்டானால் மட்டும் தான் உங்களை அணியிலிருந்து நீக்குவேன்’ என்று பதிலளித்தார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை தந்தது” என சாம்சன் கூறினார்.
English Summary
Cricket Sanju samson gautam gambhir