மும்பையில் அதிர்ச்சி: ஸ்டுடியோவில் பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்ட 15க்கு மேற்பட்ட குழந்தைகள் மீட்பு; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!
More than 15 children held hostage in a studio in Mumbai rescued suspect shot dead in encounter
மும்பையில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை பிணைக்கைதிகளாக அடைத்து வைத்திருந்த நபர் ஒருவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பவாய் பகுதியில் ஆர்.ஏ. ஸ்டுடியோவுக்குள் ரோஹித் ஆர்யா என்ற நபர் பல குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதற்கிடையே, குழந்தைகளின் பெற்றோரும் உறவினர்களும் ஸ்டுடியோவுக்கு வெளியே கூடினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிணைக்கைதிளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் 17 பேரை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரோஹித் ஆர்யா, ஆர்.ஏ. ஸ்டுடியோவில் வேலை செய்வதோடு, அவர் ஒரு யுடியூப் சேனலையும் நடத்தி வந்துள்ளார். பிணையக்கைதிகளாக அடைக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் நடிப்பு பயிற்சி பெறுவதற்காகவும், ஒத்திகையில் ஈடுபடுவதற்காகவும் வந்தவர்கள் என கூறப்படுகிறது. இவ்வாறு குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா, 'தன்னுடைய கோரிக்கை என்ன என்பதை கேட்க வேண்டும். இல்லையெனில் நிலைமை மோசமாகிவிடும்' என மிரட்டியதோடு 'பணம் தனது நோக்கம் அல்ல' எனவும் கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன், தன்னை கோபப்படுத்தினால் ஒட்டுமொத்த இடத்தையும் தீப்பற்றி எரியவைத்து அனைவரையும் கொன்றுவிடுவேன் கூறி பீதியடைய வைத்துள்ளார். இதன் பிறகே போலீசார் பாத்ரூம் வழியாக ஸ்டுடியோவுக்குள் அதிரடியாக நுழைந்து குழந்தைகளை மீட்டுள்ளனர். அப்போது ரோஹித் ஆர்யாவை போலீசார் கைது செய்த போது அவரிடம் ஏர்கன் மற்றும் சில ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளை மீட்க முயற்சித்த போது ரோஹித் ஆர்யாவை போலீசார் சுட்டுள்ளனர். தற்காப்புக்காக சுட்டதாக விளக்கமளித்துள்ள போலீசார், துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த ரோஹித் ஆர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
English Summary
More than 15 children held hostage in a studio in Mumbai rescued suspect shot dead in encounter