கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம்!...இந்தியா-வங்களாதேசம் டெஸ்ட் போட்டி முழுமையாக ரத்து! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.  

சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்,  35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்த நிலையில், இன்று காலை முதல் கான்பூரில் மீண்டும் மழை பெய்து வருவதால் 2வது நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும்  ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cricket fans disappointed India Bangladesh test match completely canceled


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->