சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் வோக்ஸ் ஓய்வு..! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் கிரிக்கட் அணியின் கிறிஸ் வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து 'ஆல்-ரவுண்டர்' கிறிஸ் வோக்ஸ்க்கு தற்போது 36 வயது.

இவரை, கடந்த 2011-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'டி-20', ஒருநாள் போட்டிகளின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தார். 

62 டெஸ்ட் (192 விக்கெட், 2034 ரன்கள்) 
122 ஒருநாள் (173 விக்கெட், 1524 ரன்கள்)
33 சர்வதேச 'டி-20' (31 விக்கெட், 147 ரன்கள்)  
போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடைசியாக இந்தியாவுக்கு எதிரான ஓவல் டெஸ்டில் (2025, ஜூலை 31 - ஆகஸ்ட் 04) விளையாடினார். இந்த போட்டியில் தோள்பட்டை காயத்தை பொருட்படுத்தாமல் கடைசி நாளில் ஒற்றை கையில் 'பேட்' செய்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு வோக்ஸ் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வோக்ஸ் அறிவித்துள்ளமை கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்மூலம் வோக்சின், 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து, வோக்ஸ் கூறுகையில், 'இங்கிலாந்துக்காக விளையாடியது பெரிய கெளரவம். நேற்று தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது போல உள்ளது. 15 ஆண்டுகள் கடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. கவுன்டி போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன். வாய்ப்பு கிடைத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் 'டி-20' லீக் தொடர்களிலும் பங்கேற்பேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chris Woakes retires from international cricket


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->