ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு விழா: நினைவு அஞ்சல் தலை, நாணயம் வெளியீடு..!
Commemorative stamp and coin released to mark RSS centenary
ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை அக்டோபர் 01-இல் வெளியிடவுள்ளார். 1925-ஆம் ஆண்டு விஜயதசமி அன்று நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., வரும் வியாழக்கிழமை அன்று (அக்டோபர் 02) 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-ன் தன்னலமற்ற சேவை மற்றும் ஒழுக்கத்திற்காக பிரதமர் மோடி நேற்று பாராட்டு தெரிவித்தார். அத்துடன், அதன் தன்னார்வலர்களின் ஒவ்வொரு செயலிலும் தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பதால் எப்போதும் உயர்வாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், பிரதமர் தனது மாதாந்திர 'மன் கி பாத்' உரையில், 1925 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று கேசவ் பலிராம் ஹெட்கேவரால் நாட்டை அறிவுசார் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டதாகவும், அதன் பயணம் குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என்று கூறியிருந்தார்.
English Summary
Commemorative stamp and coin released to mark RSS centenary