செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதல் இந்திய பெண்!
Chess FIDE Divaya Hampy
பீடே மகளிர் செஸ் உலகக் கோப்பை ஜார்ஜியாவின் படுமி நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் பெரும் சாதனை படைத்துள்ளார்.
அரையிறுதியில் திவ்யா, சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார். முதல் ஆட்டத்தில் டிரா செய்த திவ்யா, இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்று 1.5 - 0.5 என்ற கணக்கில் அபாரமாக வெற்றிபெற்றார்.
இதனால் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளார். இதனுடன், வரும் Candidates தொடரிலும் அவர் தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு அரையிறுதியில் கோனேரு ஹம்பி, சீனாவின் டிங்ஜி லீயுடன் மோதினார். போட்டி சமமாக முடிந்ததால், இறுதிக்கு செல்ல ஹம்பி டை-பிரேக் ஆட்டத்தில் டிங்ஜி லீயை எதிர்கொள்வார்.