இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்! பிசிசிஐ அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷிகர் தவானும் துணை கேப்டனாக புவனேஸ்வர் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா ஸ்ரீலங்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடும் இந்திய அணி ஆனது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வீரர்கள் கொண்ட அணியானது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆடுவதற்கு இங்கிலாந்தில் உள்ள நிலையில், மேலும் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறார்கள்.

இந்த நிலையில் 2-வது கட்ட அணியை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டிய முடிவு செய்து அதன்படி இந்த அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியானது முழுக்க முழுக்க இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இருக்கிறது. ஐபிஎல்லில் ஜொலித்த வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் ஆனது, "ஷிகர் தவான் (கேப்டன்), பிருத்வி ஷா, தேவதத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், சாஹல்,  ராகுல் சாஹர், கே கவுதம், கிருனல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேதன் சகரியா

வலை பந்துவீச்சாளர்கள்: இஷான் பொரல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI Announce Shikar Dawan Caption India’s squad for ODI T20I series against Sri Lanka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->