பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


உலக அளவில் வர்த்தக ரீதியாகவும், ரசிகர்களின் வரவேற்பு அடிப்படையிலும் இந்தியன் பிரீமியர் லீக் - ஐபிஎல் தொடர் வெற்றி அடைந்துள்ளது. 14 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 15 வது சீசனில் விளையாட மேலும் இரண்டு அணிகளுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

புதிய அணிகளுக்கான ஏலம் டெண்டர் நடைமுறையை பிசிசிஐ கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியிட்டது. இதற்க்கு விண்ணப்பம் 10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. மேலும் இந்த தொகை திரும்ப வழங்கப்படாது என்றும் அறிவித்தது.

ஆனால், திடீரென ஐபிஎல் அணிகளுக்கான டெண்டர் தேதியை பிசிசிஐ நீட்டித்து உத்தரவிட்டது. புதிய அணிகளுக்கான விண்ணப்பத்தை வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்த நிலையில், இதன் தேதியை வருகின்ற 20ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், தேதியை நீட்டித்தற்கான காரணத்தை இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியன் பிரீமியர் லீக்கில் புதிய இரண்டு அணிகளில் ஒரு அணியை வாங்குவதற்கு, பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம் தெரிவித்த காரணத்தினால் தேதியை நீட்டித்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புதிய அணிகள் ஏலம் விடுவதன் மூலம் பிசிசிஐக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே குஜராத், அகமதாபாத் நகரின் பெயரில் ஒரு கிரிக்கெட் அணி இருக்கும் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பு : உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிழம் நிர்வாகம் இங்கிலாந்தில் உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bcci announce for ipl team


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal