#IPL2022 : குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி.. ஆனாலும் வெயிட்டிங் லிஸ்ட்.? - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 67 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 62 ரன்களும், டேவிட் மில்லர்  34 ரன்களும் எடுத்தனர்.

அதனை தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 73 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதேபோல் டு பிளேசிஸ் 44 ரன்களும், மேக்ஸ்வெல் 40 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால், நாளை நடைபெறும் மும்பை- டெல்லி போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால், பெங்களூர் அணி ப்ளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore won by 8 wickets against Gujarat Titans


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->