இந்திய அணியில் மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று.! முதல் ஒருநாள் போட்டி ரத்து.? பிசிசிஐ வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் மற்றும் கொல்கத்த ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 6, 9, 11 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகளும், 16, 18, 20 ஆகிய தேதிகளில் இருபது ஓவர் போட்டிகளும் நடைபெற உள்ளன. 

அகமதாபாத் வந்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு கொரோணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், நெட் பவுலர் நவதீப் சைனி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 31ஆம் தேதி வீரர்கள் தலைமை முகாமிற்கு செல்ல முன்பு ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வரவேற்பதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல தற்போது அக்சர் படேலுக்கும், மற்றொரு வீரருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இந்திய அணியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், முதல் ஒரு நாள் போட்டி ரத்தாகுமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ நிர்வாகி கூறியதாவது, முதலில் நான்கு வீரர்கள் கொரோனா உறுதி ஆனது. இதையடுத்து, மேலும் சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானால், முதல் ஒரு நாள் போட்டி ஒத்திவைக்கப்படும் என முன்பே தெரிவித்திருந்தோம். தற்போது கூடுதலாக இரண்டு பேருக்கு கொரோனா தொற்று  உறுதியாகி உள்ளது. இது குறித்து ஆலோசித்து உரிய முடிவுகள் எடுப்பேன் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

axar patel and another player corona positive


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->