ஹேசில்வுட் அபார பந்துவீச்சு.. டேவிட் வார்னரின் அதிரடி.. இலங்கையை வீழ்த்தி முதல் டி20 போட்டியை வென்ற ஆஸ்திரேலியா.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தற்போது முதல் டி20 போட்டிகள் நேற்று  கொழும்புவில் நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படிm முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 128 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அசலங்கா 38 ரன்னும், பதும் நிசங்கா 36 ரன்னும் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். ஆஸ்திரேலிய அணி 11.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 101 ரன்களை எடுத்த போது மழை பெய்தது. அதன் பிறகு போட்டு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, மழைநீர் மீண்டும் போட்டு தொடங்கப்பட்டது. 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்களை எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 44 பந்துகளில் 70 ரென்னும், ஆரோன் பின்ச் 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதி வரை இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AUS vs SL T20 Match AUS Win


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->